திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
ஊத்துக்கோட்டையில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சாந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவரும் பூண்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளருமான ஏ.கே. மூர்த்தி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியில் பாஜக வேட்பாளர் வி.பாலகணபதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு செய்ய வேண்டுமெனவும் மற்றும் பிரச்சாரத்திற்கு வரும் போது ஒரு பூத்திற்கு குறைந்தப் பட்சம் ஐந்து இரு சக்கர வாகனங்கள் பங்கேற்க வண்டும் என அப்போது அவர் அறிவுறுத்தினார்.மேலும் பல்வேறு வகையான ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அனைத்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.























