திருவாரூர், ஜன. 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் மாதா கோவில் தெருவை சார்ந்த நாட்டாமைகள் மற்றும் கிராமத்தினர்.. கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பொய் புகார் மனு அளித்தவர்கள்  மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்..

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா அன்னியூர் மாதா கோவில் தெருவில் வசிப்பவர் ஜெனிட்டா மேரி. இவருக்கும் அருகே உள்ள வடமட்டம் பகுதி சார்ந்த அஜித் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது..

மேலும் அப்பிரச்சினைக் குறித்து அவர்கள் இருவருக்கிடையே கடந்த 17. 12. 2023 அன்று ஜெனிடாவின் வீட்டில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அஜித்தின் தாயார் அன்னியூர் மாதா கோவில் தெரு நாட்டாமைக்காரர்களிடம் ஜெனிடா மற்றும் அஜித் ஆகியோர் இடையே தகாத உறவு இருப்பதாக புகார் தெரிவித்ததாக கூறப் படுகிறது..

அப்புகார் தொடர்பாக நாட்டாமை வாசுதேவன் என்பவர் ஜெனிட்டா மேரியிடம் விசாரணை மேற்கொண்டதாகவும்,. அப்பொழுது ஜெனிட்டாவின் கணவர் கணேசன் என்பவர் நாட்டாமை வாசுதேவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அப்பிரச்சினைத் தொடர்பாக இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பாலையூர் காவல் நிலைய ஆய்வாளர் இரு தரப்பினரிடமும்  எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.

அதற்கிடையே, கடந்த 25.12.23 கிறிஸ்துமஸ் அன்று மதியம் ஜெனிடா மேரியின் சகோதரி சசிகலா – ரமேஷ் அவர்களுடைய மகன்கள் அஸ்வின், அஜய் மற்றும் ஜெனிட்டாமேரியின் உறவினர் பெர்னாண்டஸ் என்பவரின் மகன்கள் ராஜ்குமார் மற்றும் அருண் ஆகிய நால்வரும் மாதா கோவில் தெருவில் அரை குறை ஆடையுடன் வந்தும், மது பாட்டில்களை உடைத்தும், அத்தெருவினரை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பாக மீண்டும் அப்பகுதியினர் பாலையூர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த நால்வரும் சசிகலா வீட்டு கொல்லைப்புற பகுதியில் உள்ள மற்றுமொறு நாட்டாமையான ராஜ் என்பவரின் சகோதரர் ஆல்பர்ட் என்பவரது வீட்டின் முன் குடிபோதையில். காம குரோத வார்த்தைகள் கொண்டு திட்டியும், ஆல்பர்ட்டின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தும், ஆல்பர்ட்டின் 16 வயது மகளை தகாத இடத்தில் கை வைத்து தாக்கியுள்ளனர். மேலும் அவர் வீட்டு வாசலில் இருந்த கிறிஸ்துமஸ் குடிலை  சேதப்படுத்தியும், இரு சக்கர வாகனத்தை தள்ளி விட்டு உடைத்து சேதப்படுத்தியதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அச்சம்பவம் குறித்து நியாயம் கேட்பதற்கு நாட்டாமைக்காரர்கள், ஆல்பர்ட், ராஜ் மற்றும் கிராமத்தினர் பெர்னாண்டஸ் வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் சசிகலா வீட்டிற்கும் சென்று அவரது மகன்களின் அநாகரிகமான நடவடிக்கைகள் குறித்து முறையிட்டதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் அவர்கள் நால்வரின் தாக்குதலுக்கு உட்பட்ட ஆல்பர்ட்டின் 16 வயது மகளுக்கு, சிறுநீருடன் ரத்தம் வந்துள்ள நிலையில்,  அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள் நோயாளிகள் பிரிவில் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். பாதிப்புக்குள்ளான அச்சிறுமியிடம் காவல்துறையினர் புகார் பெற்று சென்றுள்ளனர். இந்நிலையில், சசிகலா தரப்பினரும் நாட்டாமை மற்றும் கிராமத்தினர் மீது புகார் அளித்துள்ளனர்.

அச் சம்பவம் தொடர்பாக பாலையூர் காவல்துறையினர் சசிகலா மகன்கள் அஸ்வின், அஜய் மற்றும் பெர்னாண்டஸ் மகன்கள் அப்பு (எ) ராஜ்குமார், அருண் ஆகியோர் 4 பேர் மீதும்.. கிராமத்தினர் எட்டு பேர் மீதும் FIR போட்டுள்ளனர்.

சசிகலாவின் மூத்த மகன் அஸ்வின் மன்னார்குடியில் உள்ள  மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியில் உள்ளதால்.. ‘அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவரது பணிக்கு ஆபத்து வரும் என்றும்.. மற்ற மூவரும் வெளிநாட்டிற்கு பணிக்கு செல்வதற்கு முடியாது என்ற காரணத்தினாலும்.. மனித உரிமை மீறல்.. கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு தள்ளி வைத்ததாகவும்… பொய்யான ஒரு தகவலை கூறி நிகழ்வை திசை திருப்ப பார்ப்பதாகவும்.. உண்மையை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என அன்னியூர் மாதா கோயில் தெரு நாட்டாமை மற்றும் பெண்கள் உள்ளிட்ட கிராமத்தினர், கிராமத்தின் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.

 

பேட்டிகள்:

  1. வாசுதேவன்-நாட்டாமை.
  2. ஜெயா -அன்னியூர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here