ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக மற்றும் மமக தொண்டி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் திருவாடானை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பட்டானி மீரான் தலைமையில் நடைப் பெற்றது.
கூட்டத்திற்கு மாநில தமுமுக துணை பொது செயலாளர் மதுரை கௌஸ் மாநில தமுமுக செயலாளர் சாதிக் பாட்ஷா மாநில சுற்று சூழல் அணி பொருளாளர் வழக்கறிஞர் ஜிப்ரி மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பனைக்குளம் பரக்கத்துல்லா முகவை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவராக தொண்டி பீர், தமுமுக செயலர் பாசிப்பட்டனம் பீர், மமக ஒன்றிய செயலர் தொண்டிராஜ், மமக ஒன்றிய பொருளாளர் முகம்மது அலி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
இந்த கூட்டத்தில் தொண்டி பேரூர் தமுமுக மமக தலைவராக காதர் தமுமுக செயலாளராக சம்சுதீன் நவ்வர் மமக செயலாளராக பரக்கத் அலி பொருளாளராக முகைதீன் பிச்சை துணை தலைவராக இனாமல் ஹசன் தமுமுக துணை செயலாளர்கள் ஹம்மாது, ஹாலிது, மமக துணை செயலாளர் கள் அஜாஸ் அஹமது, அப்துல்லா, SMI செயலாள ராக அன்சாரி, மீனவரணி செலாளராக பெரியசாமி, தொண்டரணி செயலாளராக மௌலான, MTS செயலாளராக மீரான், வர்த்தக அணி செயலாளராக VMA அக்பர் அலி, மருத்துவ அணி செயலாளராக நிஸ்தார் ஆகியோர் தேர்ந் தெடுக்கப் பட்டனர்.
இந்த கூட்டத்தில் தொண்டி செ.மு.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்கு பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத பற்றாக் குறையை மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக சீர் செய்திட வேண்டும் என்றும்,
தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
செய்திகள் தமிழ்நாடு தென்மண்டல தலைமைச் செய்தியாளர் இ.சிவசங்கரன்