செங்கல்பட்டு, பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் துவங்கியது. அப் பேரணியினை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் கலந்துக்கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து விழிப்புணர்வுப் பேரணி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மணிகூண்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வேதாசலம் நகர் வழியாக வந்த பேரணி இராட்டினங்கிணறு பகுதியில் நிறைவுபெற்றது.
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அப்பேரணியில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர். அப்பேரணியின் முக்கிய நோக்கமாக மூறாம் ரக செயலிகளின் மூலம் லோன் வாங்க வைத்து பின்னர் தங்களின் புகைபடத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி நடைபெற்று வருகின்றது, வேலை வாங்கி தருவதாக கூறி அனுப்பிய இணைப்புக்குள் சென்று 10 ரூபாய் அனுப்ப சொல்லி மொத்த வங்கி பணத்தையும் திருடும் மோசடி நடைபெற்று வருகின்றது, பொய்யான வலையதளக் கணக்குகளை உபயோகித்து மற்றவரைத் தொடர்புகொண்டு ஆபாசமான செயல்கள் மூலமாக ஆசைகளை தூண்டி அதை பதிவு செய்துகொண்டு பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி நடைபெறுகின்றது எனவே இது போன்ற சமூதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் சைபர் கிரைம் செயல்களில் ஈடுப்பட்ட நபர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்களாம் என அச்சிறப்பு மிகு விழிப்புணர்வு பேரணியால் அறிவுறுத்தப்பட்டது.




















