பொன்னேரி, மே. 19 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பஜார் பகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
மீஞ்சூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பா.சுகுமாரன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர். பரிமளம்விஸ்வநாதன், நகர பொறுப்பாளர்கள் டி.வி.இளங்கோ, நா.மோகன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி, தலைமை கழக பேச்சாளர் மதுரை சேவியர், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணை செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மு.பகலவன், இ.நிலவழகன் ,மு. கதிரவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
சிறப்புரை நிகழ்த்திய சிறப்பு அழைப்பாளர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஓராண்டு சாதனை குறித்தும், அரசு மக்களுக்கு செய்து வரும் பல்வேறு நல திட்டங்களையும் பட்டியலிட்டு பேசினர், மேலும் முன்பிருந்த அதிமுக ஆட்சியாளர்கள் பல லட்சம் கோடிகளை கடனாக வைத்து விட்டுச் சென்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டினையும் குறிப்பிட்டுக் கூறினார்கள்.
தற்போதை திமுக தலைமையிலான அரசுக்கு ஆட்சி ஏற்ற நாள்முதல் சந்தித்த பிரச்சினைகளையும் அதனை மீறி இந்த ஆட்சி சாதித்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர். ஆட்சி ஏற்ற மூன்று மாதங்கள் தொடர்ந்து கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பாற்றியதையும், அதனிடையே பால் விலை குறைப்பு ,பெண்களுக்கு இலவச பேருந்து கட்டணம், மாணவர்களுக்கு வீடு தேடி கல்வி திட்டம், உள்ளிட்ட திட்டங்களை செய்து சாதனைப் புரிந்த அரசு இவ்வரசு என பொது மக்களிடம் எடுத்துரைத்து பேசினர்.
கூட்டத்தில் நகர செயலாளர்கள் பொன்னேரி தீபன், மீஞ்சூர் தொழிலதிபர் தமிழ் உதயன், பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், இறுதியில் வாசுதேவன் நன்றி தெரிவித்தார்.
























