கோட்டைக்குப்பம், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் மற்றும் ஸ்கில் இந்தியா இணைந்து வழங்கும் சங்கல்ப் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம் திருவள்ளூர் மாவட்டம் கோட்டைக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஜமிலாபாத் கிராமத்தில் நடைபெற்றது.
சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஹாஜா மொய்தீன் பெண்களுக்கு திட்டம் குறித்தும் எவ்வாறு அதனை செயல்படுத்துவது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு மாநில தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவன அலுவலர் சாலமன் மேற்பார்வையில் திட்டத்திற்கான பயிற்சி பெறுபவர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஜமிலாபாத் அங்கன்வாடி பணியாளர் நாகஜோதி, உறவு அறக்கட்டளை செயலாளர் முத்து, ஜமீலாபாத் கிராம நிர்வாகிகள் மற்றும் பெண்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.























