பள்ளிக்கரணை, ஏப். 18 –

தீ விபத்தில் சிக்கியவர்களை எப்படி விரைந்து காப்பாற்றி முதலுதவி கொடுப்பது என்பது குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைப்பெற்றது.

தீயணைப்பு துறையினரால் வருடந்தோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீ தொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் பகுதியாக இன்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு தென்சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட அலுவலர் சையது முகமது தலைமையில் சென்னை பள்ளிகாரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால்  தீயணைப்பு துறையினர் எவ்வாறு மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

அச்சமயத்தில் எந்த மாதிரியான உபகரணங்களை பயன்படுத்துவார்கள் மேலும், மாடியில் தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை எப்படி மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கயிறு மூலம் கீழே மீட்டு கொண்டு வரப்படுவார்கள் என்பதை தத்ருவமாக செய்து காட்டினர்.

தொடர்ந்து, தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் தீயணைப்புதுறையினர் எவ்வாறு தீயை அணைக்க போராடுவார்கள் என்பதை தண்ணீரை பீய்ச்சி அடித்து செய்து காட்டினார்கள்.

பொதுமக்களுக்கு தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக வீட்டிலோ அல்லது கடைகளிலோ தீ விபத்து ஏற்பட்டால் அதை கண்டு அஞ்சி ஓடாமல் அதை எப்படி அணைத்து விபத்தை தவிர்க்கலாம் என்று செய்துகாட்டி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சியளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here