காஞ்சிபுரம், ஜூலை. 28 –
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள அசோக் நகரில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிதாக நியாயவிலை கடை அமைக்கும் கட்டடப் பணி நேற்று துவங்கப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஒன்றிய பெருந்தலைவர் மலர்க்கொடிகுமார் தலைமையேற்றார்.
சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம். பி எழிலரசன் அடிக்கல் நாட்டினார் உடன் மாவட்ட பிரிதிநிதி எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் தி.ராம்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் சைலஜாசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




















