சோழவரம், பிப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ணாலகணபதி ….

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை கிராமத்தின் கிராம தேவதையாக இருந்து அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

புதியதாக அமைக்கப்பட்ட அம்மன் ஆலயத்திற்கு கடந்த ஏழு தினங்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதற்கான புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா  வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

காலை ஒன்பது  மணி அளவில் கடம் புறப்பாடு நடைபெற்று விமான கோபுரத்தின் மீது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு பக்தர்களின் மத்தியில் தெளிக்கப்பட்டது.

அவ்விழாவில் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன், ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார், துணைத் தலைவர் தனசேகர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவில் நிர்வாக குழு சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவித்து கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here