கும்பகோணம், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் ஏலச்சீட்டு போட்டுள்ளார். தனக்கான சீட்டு பணத்தை தருமாறு செந்தில் செல்வராஜியிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் அதனை தடுக்கச் சென்ற செந்தில் நண்பர் ஐயப்பன் என்பவரை செல்வராஜ் கத்தியால் குத்தியதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அது தொடர்பாக பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ராதிகா செல்வராஜிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 11 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவு வழங்கினார். அதனை தொடர்ந்து செல்வராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்























