தஞ்சாவூர், மார்ச். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

மின்சாரத்தை சிக்கனப் படுத்த பத்தாம் வகுப்பு மாணவனின் அறியக் கண்டுப்பிடிப்பு, ஏ1 தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர் உருவாக்கி உள்ள கண்டுப்பிடிப்பு பள்ளி ஆசிரியர்களை வியக்கச் செய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சுந்தரம் நகர் அருகே அமைந்துள்ளது திருமகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, மேலும் அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக சமூகத்தில் பயன் பெறும் வகையில் ஏதாவது ஒரு புதிய கண்டுப் பிடிப்புகளை உருவாக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அப்பள்ளியில்  10-ம் வகுப்பு கல்விப் பயிலும் மாணவன் சஞ்சய் ராஜ் என்பவர், மின்சாரத்தை சிக்கனப் படுத்துவதற்கான சாதனத்தை செயற்கை நுண்ணறிவு எனும் ( AI ) தொழிற் நுட்பத்தை   பயன்படுத்தி சென்சார் மூலம் உணர்தல் எனும் கருவியினை உருவாக்கியுள்ளார்.

அதன் மூலம் வீடுகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள், மனிதர்கள் அவ்வறையில் இருக்கும் போது எரியும் பின்பு அவர்கள் அவ்வறையினை விட்டு வெளியேறினால் அம் மின் விளக்குகள் தானாக அணையும் படி ஏ 1 எனும் தொழிற் நட்பத்தைப் பயன்படுத்தி சென்சார் உணர்தல் கருவினை பயன் படுத்தி அணையச் செய்துக் காட்டியுள்ளார்.

மின்சாரம் பயன்படுத்தும் மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கும் நிலையில், அச்சாதனத்திற்கு இன்னும் மெருகூட்டி பெரிய அளவில் செயல்படும் படி செய்தால் அதன் மூலம் மின் தட்டுப்பாடு மற்றும் மின்சார சிக்கனம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அம் மாணவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here