திருவாரூர், ஜூன். 20 –

காதலித்த 19 வயதுப் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கொத்தனார் வேலை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் வயது 27 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த வயது 19 என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும், அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வன்புணர்வு செய்துள்ளார்.

அதனால் அப்பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நிலையில் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள இளைஞன் மறுத்து உள்ளதால் அந்த பெண் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கொத்தனார் தமிழழகன் மீது வழக்குத் தொடரப்பட்டு அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here