மயிலாடுதுறை, ஏப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டத்தை நான்கு நாட்களாக அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மேலும் அது தொடர்பாக 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சிறுத்தையின் புகைப்படம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் ஆரோக்கியநாதபுரம் கருவை காட்டு பகுதியில் மாநில கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் ஆய்வு செய்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ..

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாடிய படம் வெளியாகி உள்ளது எனவும் மேலும் வனத்துறை சார்பில் சற்று நேரத்தில் பத்திரிக்கை குறிப்பு புகைப்படத்துடன் அனுப்பப்படும் எனவும் அப்போது செய்தியாளர்களிடம் சம்பவ இடத்தை பார்வையிட்ட மாநில கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் தகவல் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here