காஞ்சிபுரம், ஜன. 22 –
விடியா திமுக ஆட்சியில் பொங்கலுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாயை 500 ரூபாய் டாஸ்மார்க் மூலமாகவும், 500 ரூபாயை உதயநிதி வெளியிட்ட திரைப்படமான துணிவு என்ற திரைப்படத்தின் மூலமாகவும் பொதுமக்களிட் இருந்து பிடுங்கி விட்டார்கள் என அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட களக்காட்டூரில் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி தலைமையில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பிரமாண்டமாக நடத்தப்பட்ட இப்பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் விடியா திமுக ஆட்சியில் பொங்கலுக்கு மக்களுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாயை 500 ரூபாய் டாஸ்மார்க் மூலமாகவும், மீதமுள்ள 500 ரூபாயை உதயாநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக வெளியிட்ட துணிவு என்ற திரைப்படத்தின் மூலமாகவும் பொங்களுக்கு மக்களுக்கு கொடுத்த ரூபாய ஆயிரத்தை பிடுங்கி விட்டதாகவும்,
அதுப்போன்றே முன்பு கலைஞர் ஆட்சியில் இலவச டிவி கொடுத்துவிட்டு சுமங்கலி கேபிள் கனெக்சன் மூலம் மாதம் 150 என மக்களிடம் பணத்தை சுரண்டிய திருட்டு ஆட்சியே திமுக ஆட்சி என்றும் அப்போது தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா. கணேசன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், அக்ரி நாகராஜ், தங்கபஞ்சாட்சரம், ஒன்றிய கவுன்சிலர் பேபி சசிகலா ராஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.























