ஊத்துக்கோட்டை, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும் அரசு மற்றும் கல்லூரி நிர்வாகம் இவைகளுக்கிடையே இருதலைக் கொள்ளி எறும்பு போல் அல்லபடும் கல்லூரி மாணவ, மாணவிகள் தகுநுத நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களில் இருந்து எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் படிப்பதற்க்கு பொன்னேரியில் அமைந்துள்ள லோகநாத நாராயணசாமி கல்லூரிக்கு அரசு பேருந்தில் இலவச பயண அட்டை மற்றும் கல்லூரி அடயாள அட்டையை பயன்படுத்தி சென்று கல்விப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஊத்துக்கோட்டையில் இருந்து பொன்னேரிக்கு நேரடியாக செல்ல நேரடி பேருந்து இல்லாததால், அவர்கள் இரண்டு மூன்று பேருந்து மாறி செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்தான் நேற்று நடைப்பெற்ற அச்சம்பவம் கல்லூரி மாணவிகளிடையே கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் நிகழ்ந்துள்ளது. லோகநாத நாராயணசாமி கல்லூரி மாணவிகள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீடு திரும்பும் போது தடம் எண் 514 பேருந்தில் ஜனப்பன்சத்திரத்தில் இருந்து பெரியபாளையம் மார்க்கமாக வந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது கல்லூரி மாணவிகளை தடம் எண் 514 அரசுப் பேருந்தின் நடத்துனர் இலவச பேருந்து பயண அட்டை இல்லாததால் நடு வழியில் கல்லூரி மாணவிகளை இறங்க கூறியுள்ளார். கல்லூரி மாணவிகள் நடத்துனரிடம் கல்லூரி நிர்வாகம் இலவச பயண அட்டை வழங்கவில்லை எங்களது கல்லூரியின் அடயாள அட்டையை பயன்பபடுத்தி கல்லூரிக்கு சென்று வருகிறோம் என அப்போது அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அதனைப் பொருட்படுத்தாத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நீங்கள் பேருந்தை விட்டு இறங்கினால்தான் பேருந்தை இயக்குவேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அக்க்கல்லூரி மாணவிகள் பாதி வழியிலேயே இறக்கி விட்ட அவர்கள் அவ் இடத்தில் இருந்து தானகுளம் பேருந்து நிறுத்ததிற்கு நடந்தே வந்து வேறு பேருந்து வந்தவுடன் பெரியபாளையத்திற்கு வந்துள்ளனர்.
மேலும் அது சம்பந்தமாக கல்லூரி மாணவிகள் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள டைம் கீப்பரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர் அதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என கூறி அங்கிருந்து கிளம்பிவுள்ளார்.
பேருந்தில் இருந்து கல்லூரி மாணவிகளை பாதி வழியில் இறக்கி விட்ட தடம் எண் 514 பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து துறை தடம் எண் 514 பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்குமா என பொருத்திருந்து பார்போம்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகங்களும் அரசு பேருந்து நிர்வாகமும், அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து பாஸ் வழங்காமல் அலட்சியப் போக்கை கடைப் பிடிப்பதாகவும், மேலும் பல்வேறுக் காரணங்களை கூறி பேருந்து பாஸ் வழங்காமல் இழுத்தடித்து வருவதால், கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது சுய மரியாதை மற்ற பயணிகள் முன்பு இழந்து வருவதும், மேலும் பாதி வழிகளில் இறக்கிவிட்டு வருவதால் ஏற்படும் விபரீதங்களை அவர்கள் தினசரி எதிர்கொண்டே தங்களது உயர் கல்வியை முடிக்க வேண்டிய நிர்ப் பந்தத்தில் இருப்பதாக மேலும் அம்மாணக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எல்லோர்க்கும் எல்லாம் என வழி நடத்தி வரும் திராவிடமாடல் அரசின் முதலமைச்சர் இதுப்போன்ற நிகழ்வுகள் இனியும் நடைப்பெறாத வண்ணம் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது. விபரீதங்கள் ஏற்படும் முன் விரைந்து செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அம்மாணாக்கர்களின் பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.