சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
சமீப காலமாக அரசு பேருந்துகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் சாலையில் ஓடுவதும், அதனை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
சமீபத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்பக்க கண்ணாடிகள் இன்றி சென்றது, செல்லும் வழியில் படிக்கட்டு தனியாக கழண்டு விழுந்தது, கோடை மழையின் போது பேருந்தில் உள்ளே சரசரவென மழை பெய்தது என அரசு பேருந்துகள் குறித்து தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், மற்றொரு சம்பவமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது வடரங்கம் கிராமம். மேலும் அக்கிராம மக்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம் என அனைத்து தேவைகளுக்கும் அருகில் உள்ள சீர்காழி நகரத்தையை சார்ந்து உள்ளனர்.
மேலும் அப்பகுதி மிகவும் பின் தங்கிய கிராமம் என்பதால் அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அரசு பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வடரங்கத்தில் இருந்து சீர்காழி நோக்கி A8 என்ற அரசு பேருந்து பணகாட்டாங்குடி பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தில் இடது புற முன் சக்கர கழண்டு பேருந்துக்கு முன்னே தனியாக சாலையில் ஓடி உள்ளது.
அதனைக் கண்ட ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தி பெரும் விபத்து ஏற்படாதவாறு பேருந்து நிறுத்திவுள்ளார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது மேலும் உயிர்ச்சேதம் எதுவுமின்றி அனைவரும் பாதுக்காப்பாக தப்பித்துள்ளனர்.





















