திருவாரூர், ஜூன், 06 –
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையத்தின் முன் சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்பொழுது, தமிழகம் முழுவதும் 43,026 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக சுமார் நாற்பத்தி ஆறு லட்சத்து 66 ஆயிரத்து 951 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும்போது ஒட்டுமொத்த தொகை வழங்குவது போல சத்துணவு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.. மற்றும் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும், ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி தமிழ்நாட்டில் ஏழு முனைகளிலிருந்து 10- ஆம் தேதி வரை 2100 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு தமிழக அரசிடம் நீதி கேட்டு வீதிதோறும் பாதயாத்திரை எனும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.