பொன்னேரி, டிச. 13 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகரத்தை அடுத்துள்ள மனோபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவிலாகும்.
இந்நிலையில் அத்திருக்கோயிலில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பி.ராம்குமார் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனை திருக்கோவிலில் நடைபெற்றது,
பொதுச்செயலாளர் தினகரன் நீண்ட நாள் ஆயுள் பெற்று வாழ வேண்டுமென சிறப்பு யாகங்களும், பூஜைகளும் அவர் பெயரில் அக்கட்சியினர் சார்பில் நடத்தப்பட்டது இதில் அமமுக கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மற்றும் ஊராட்சியைச் சார்ந்த அக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




















