திருவள்ளூர், ஏப். 25 –

திருவள்ளூர் மாவட்ட ஆய்சியரக வளாகத்தில் வாக்ஃபார் பிளாஸ்டிக் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நேற்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில், நெகிழி ஒழிப்புக்குறித்த நடைபேரணியில் கலந்துக்கொண்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாரட்டினார்.

சுற்றுசூழல் மாசுப்படுவதற்கு மிக முக்கியமான் காரணி நாம் அதிகமாக பயன்படுத்தும் நெழிகிப் பொருட்களின் வளர்ச்சிதான், பிளாஸ்டிக் மூலம் வாகன உதிரி பாகங்கள், தண்ணீர் பைகள், பிளாஸ்டிக் குடங்கள், அணிகலன்கள், என பல தரப்பட்ட உபகாரணங்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நெகிழியை தயாரிக்கும் போது வெளிப்படும் ரசாநனக் கழிவுகள் நீர்நிலைகளில் கலந்து நீரை மாசுப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

பிளாஸ்டிக் ஒரு மக்காத குப்பைகள், இவை எளிதில் மண்ணின் வளத்தை கெடுப்பது மட்டுமில்லாது, நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை தடுக்கிறது. பாலித்தீன்கவர்கள் பல ஆண்டுகள் பூமியில் மக்காமல் அப்படியே இருக்கின்றன. மாறிவரும் இந்த பூமியின் வறண்ட நிலைக்கு முக்கிய காரணம் இந்த நிகழ்வுகள்தான். முடிந்தவரை பாலிதீன் கவர்களை தயாரிக்காமல், உபயோகிக்காமல் இருக்கலாம், இதனால் பிளாஸ்டிக் மாசுகளை தவிர்க்கலாம்.இந்த பூமி நம்முடைய தாய் போன்றது அதனைப்பாதுகாப்பதும், வளமையாக வைத்திரிப்பதும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். நம்முடைய நாட்டில் ஏரளாமான நன்மை வாய்ந்த இயற்கைப் பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்துவோம். நெகிழியை ஒழிப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக நெகிழி ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வு நடை பேரணி, திருமழிசை பேரூராட்சி பகுதியில் தொடங்கி வெள்ளவேடு, நேம ம், அரண்வாயில்,மணவாளன் நகர், வழியாக மாவட்ட ஆட்சியரகம் வரை நடைப்பயணமாக வந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்ஃபார் பிளாஸ்டிக் இநக்கத்தினைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் வாக்ஃபார் பிளாஸ்டிக் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கௌதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ( வீட்டு வசதி ) சங்கரி, தன்னர்வலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here