புதுச்சேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இன்றி கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் வெறிச்சேடி காணப்படுகிறது.
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் தவிர்த்து வருகின்றனர்.
இதனிடையே வார இறுதி நாட்களில் வழக்கமாக கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக கூட்டம் இன்றி வெறிச்சேடி காணப்படுகிறது. குறிப்பாக கடற்கரை சாலை, பாரதி பூங்கா, பாடகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்ள் கூட்டம் இன்றி வெறிச்சேடி காணப்படுகிறது.




















