மயிலாடுதுறை, மார்ச். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மின்வாரிய பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மின்வாரிய திட்ட இயக்குனர் சிவராஜன் தலைமை வகித்தார். மின்வாரிய திட்ட செயலர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

ஆர்பாட்டத்தில், வாரிய உத்திரவு 2 ஐ ரத்து செய்யக்கோரியும், வாரிய உத்திரவு 5, 6, ஐ ரத்து செய்யக் கோரியும், மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை ரத்து செய்யும் உத்திரவை ரத்து செய்ய கோருவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 50க்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்துக் கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here