குத்தாலம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, விக்ரமன் குத்தாலத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும், மகாகாளியம்மன் ஆலய வைகாசி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது.
முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு அலகு காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்
பின்னர் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை அம்பாளுக்கு செலுத்தினர், தொடர்ந்து மகா காளியம்மனுக்கு பக்தர் கொண்டு வந்த பாலினை கொண்டு பாலாபிஷேகம் மற்றும், மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது. அந்நிகழ்வில் பெரும் திரளான பொதுமக்களும், பக்தர்களும், கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை விக்ரமன் குத்தாலம் கிராமவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.




















