காஞ்சிபுரம், ஏப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்அம்பி கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இன்று வெகுச்சிறப்பாக 27 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது.

மேலும் அவ்விழாவில் காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் பா. போஸ் தலைமை வகித்தார். தாளாளர் டாக்டர். அ. அரங்கநாதன், தலைவர் வி ஜெயக்குமார், செயலாளர்  கே.வீரராகவன் மற்றும் பொருளாளர் மல்லிகா மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் கு.வெங்கடேசன் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று, ஆண்டு அறிக்கையினை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர். இளங்கோவன் வெள்ளைச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, சுமார் 550 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

முன்னதாக சென்னைப் பல்கலைக்கழக அளவில் முதுகலை உயிரி வேதியியல் துறையில் 8 வது இடம் பிடித்த வி. ரெனிடா மினி, இளங்கலை இயற்பியல் துறையில் 9வது இடம் பிடித்த கே. பரமேஸ்வரி, இளங்கலை நுண்ணுயிரியல் துறையில் 10வது இடம் பிடித்த கே.கோபிகா, முதுகலைத் தமிழ் துறையில் 10வது இடம் பிடித்த கே.லாவண்யா ஆகிய மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்பித்தார். இதில் பட்டம் பெற்றவர்களுக்கு நிர்வாக இயக்குநர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிறைவாக கல்லூரி துணை முதல்வர் ம. பிரகாஷ் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இதில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here