கும்பகோணம், மே. 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் …

கும்பகோணம் அருகே வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு தேர் பவனி வான வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும், தேர்பவனி, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, 17 ஆம் ஆண்டு விழா, கடந்த 11 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு, பங்கு தந்தை எட்வர்ட், உதவி பங்கு தந்தை ஆன்றோ பிரிவின், ஆகியோர் தலைமையில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

முன்னதாக நேற்று காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினார்கள். இனைததொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  தேரில் புனித ஜெபமாலை மாதா, சம்மனசு, சூசையப்பர், அந்தோனியார், 5 ஆடம்பர தேரில் எழுந்தருள தேர் பவனி வாணவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது. தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த நிகழ்வில்  ஏராளமானோர் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள் மற்றும் இளைஞர்கள், கிராமவாசிகள், விழாகுழுவினர் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here