பழனி:

பழனி ஆர்.ஜே.நகரை சேர்ந்தவர் கஸ்தூரிராஜா(வயது52). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனவே அவரை பார்ப்பதற்காக மனைவி சாவித்திரியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றுவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் அங்கிருந்த பீரோவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை அக்கம்பக்கத்தினர் கஸ்தூரிராஜாவின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளைபோன நகை-பணம் குறித்து கஸ்தூரிராஜா வந்த பிறகே முழுவிபரம் தெரியவரும்.

பழனி பகுதியில் அரங்கேறி வரும் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஆன்மீகத்தலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து வாலிபர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்துவிட்டு தப்பிச்செல்கின்றனர்.

இதனால் துப்புகிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். நேற்றும் பா.ஜனதா நிர்வாகி வீட்டில் கொள்ளை போனது. ஆனால் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை.

எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வெளிமாநில வாலிபர்களை கண்காணிக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here