பெரியபாளையம், ஜன. 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் பகுதி செய்தியாளர் சீனிவாசன் …

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் உள்ள பாலேஸ்வரம் பகுதியில் 9067 பதிவு எண்  கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

அக் கடையில் 1000.க்கும் மேற்பட்ட மதுப்பிரியர் தினசரி பல்வேற தரம் மற்றும் அளவிலான மதுபானங்களை வாங்குவதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில், அக்கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட ரூ. 10 முதல் 40 வரை கூடுதலாக மதுபான பாட்டில்களுக்கு பணம் வசூலிப்பதாக அக்கடையிக்கு தினசரி வரும் மது பிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அக்கடை ஊழியர்கள்  கேட்கும் பணத்தை,  கொடுக்க மறுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, மதுப்பாட்டில் தரமறுப்பதாகவும், மேலும் அவர்கள்  கொடுக்கும் சரியானப் பணத்தை வீசியெறிந்து தங்களை அவமானப் படுத்துவதாகவும், மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

மேலும் அப்பிரச்சினைக் குறித்து, அப்பகுதி மதுப்பிரியர்கள் தெரிவிக்கும் போது, தாங்கள் நாள்தோறும் கூலி வேலை செய்து நாள் ஒன்றுக்கு ரூ. 300.முதல் 400 ரூபாய் வரையில் வேலை செய்து கூலி பெற்று வருவதாகவும், வேலைச் சுமையால் ஏற்படும் வலியினைப் போக்கவதற்காக மாலை நேரங்களில் தங்களுக்கு ஏற்றவாறு குறைந்த விலை மதுபானம் வாங்கி அருந்துவதாகவும், ஆனால் அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.10 முதல் அதிக பட்சமாக ரூ. 80 வரை அக்கடையில் விற்பனை செய்வதாக அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.

அதன்படி, அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 ரூபாயும், அதுவே ஆஃப் பாட்டில் என்றால் 20 ரூபாயும், ஃபுல் பாட்டில் என்றால் 40 ரூபாயும், பீர் பாட்டிலுக்கு ரூபாய் 50 அதுவே உயர் ரக மதுபானம் என்றால் 60 முதல் 80 ரூபாய் வரை அதிகப்பட்சமாக வசூல் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். அதுக் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தக் கடையின் மேலாளர் மற்றும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அரசு அரசு டாஸ்மாக் மதுபான கடையில் நிர்ணயத்தை விலையை விட கூடுதலாக வசூல் செய்யும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். ஆனால் அதற்கு மாறாக அவரின் உத்தரவுகளை அக்கடையில் பணி புரியும் ஊழியர்கள் கடை பிடிப்பதில்லை என்றால் அதற்கு என்ன பொருள் என மதுப்பிரியர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.  அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், துறைச் சார்ந்த நிர்வாகம் மதுப்பிரியர்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து  ஆய்வு நடத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here