பெரியபாளையம், மார்ச். 25 –
பெரியபாளையம் அருகே இளம்பெண் எந்நேரமும் செல்போன் பயன்படுத்தி வந்ததை அவர் தாய் கண்டித்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்ட பரிதாபம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜனனி (20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜனனி வீட்டில் இருக்கும் போது, எந்நேரமும் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். அதனை இவரது தாய் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் இன்று, அதிகாலையில் படுக்கையில் இருந்து கீழே விழுந்த ஜனனியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி செய்தியாளர் சீனிவாசன்





















