அம்பத்தூர், சனவரி. 26 –
இன்று இந்தியாவின் 75 வது குடியரசுத் தினத்தினை நாடு முழுவதும் அரசு மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி. நகரில் உள்ள பேஸ் 2 பகுதியில் செயல்பட்டு வரும் மக்கள் பொது நலச் சங்கம் சார்பில் இன்று காலை 9.30 மணியளவில் 75வது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து அப் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெகுச்சிறப்பாக்கொண்டாடினார்கள். இந்நிகழ்விற்கு அம்பத்தூர் MkB. நகர் பேஸ்-2 மக்கள் பொது நல சங்கத்தின் பொதுச் செயலாளரும் தம்பட்டம் நாளேட்டின் ஆவடி சட்ட மன்ற தொகுதி செய்தியாளருமான D ஜெயக்குமார் முன்னிலை வகிக்க, அச்சங்கத்தின் தலைவரும் தம்பட்டம் நாளேட்டின் செய்தியாளர்கள் ஒருங்கிணைப்பாளருமான .Dr.T.முருகன் தலமை தாங்க, துணைத் தலைவரும் தம்பட்டம் பப்ளிகேசன் நிர்வாக மேலாளருமான வைரப் பெருமாள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவண்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
நிகழ்வின் முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் நிறைவில் தேசிய கீதமும் அப்பகுதி வாழ் பள்ளி மாணவர்களால் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அச் சங்கத்தின் ஆலோசகர் ஆசிரியர் T. அப்பா பழம் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்வின் நிறைவாக நிகழ்வில் பங்கேற்ற அச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அச்சங்கத்தின் பொருளாளரும், தம்பட்டம் நாளேட்டின் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி செய்தியாளருமான ஜெபஸ்டீன் நன்றியுரை நிகழ்த்தினார்.






















