பெரியபாளையம், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சீனிவாசன் …
பெரியபாளையாம் அருகே மர்ம நபர்கள் சிலர் கோயில் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 சவரன் நகை, மற்றும் ரூ.10000 உண்டியல் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள ஆத்துப்பாக்கம் பகுதியில் அருள்மிகு சுந்தரநாயகி அம்பாள் உடனுறை ஆதிபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அண்மையில் அந்த கோவிலில் புனரமைப்பு நிறைவுப் பெற்று, கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த 2சவரன் தாலி பொட்டு, உண்டியல் பணம் ரூ.10000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதுக்குறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















