காஞ்சிபுரம், டிச. 27 –

தமிழக முதல்வர் அவர்களின் செயல்பாடுகளால் ஊக்கம் பெற்று தமிழகத்திலேயே முதன்மையான ஊராட்சியாக  ஆதனூர் முதல்நிலை ஊராட்சியை மாற்றி தமிழக முதல்வர் அவர்களின் கரங்களால் சிறந்த ஊராட்சிக்கான விருது பெறும் நோக்கில் பதவியேற்று 70 நாட்களில் இரண்டரை கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஆதனூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன் பெருமிதத்துடன் கூறுகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவராக திமுக நிர்வாகி தமிழமுதன் பதவி வகித்து வருகிறார். 15 ஆயிரம் பேர் வசிக்கும் மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்ற 70 நாட்களில் மொத்தம்  இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு ஊரக வளர்ச்சி பணிகளான  அரசு இ சேவை மையம், 50லட்சம் ரூபாய் மதிப்பில் 100வாட்ஸ்  தெருவிளக்குகள், சுத்திகரிப்புகுடிநீர் திட்டம், ஆம்புலன்ஸ் சேவை,  குற்றங்களை தடுக்க சிசிடிவி, புறக்காவல் நிலையம், பசுமையான ஊராட்சியாக மாற்றிட வேண்டி மரக்கன்றுகள் நடுதல் குப்பையில்லா ஊராட்சி என பல்வேறு பணிகளை தன்னுடைய சொந்த நிதியை கொண்டும் ஊராட்சியின்  நிதியை கொண்டும் தொண்டு நிறுவன நிதியின் மூலமும் செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று ஆதனூரில் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளிலேயே முதன்முறையாக புகையில்லா பேட்டரியில் இயங்கும் 15  வாகனங்கள் 2 டிராக்டர்களை  மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிடவும்  தூய்மையான ஊராட்சியாக மாற்றிடவும்  வேண்டி  ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன் ஒன்றியக் குழு உறுப்பினர் மலர்விழி தமிழமுதன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன் தமிழக முதல்வர் அவர்களின்  ஆணைக்கிணங்கவும்  அவருடைய  செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டும்  மாண்புமிகு சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன், மற்றும்  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் ஆகியோர்  வழிகாட்டுதலின்படியும்    ஆதனூர் ஊராட்சியை  தமிழகத்திலேயே முன் மாதிரியான, மற்றும்  முதன்மை ஊராட்சியாக மாற்றி தமிழக முதல்வர் அவர்களின் கரங்களால் சிறந்த ஊராட்சிக்கான  விருது பெறும் நோக்கில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி  வருவதாகவும் அதற்காக உழைத்து வருவதாகவும்  தான் ஒரு  திமுக தொண்டன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப் படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது  ஒன்றியக் குழு உறுப்பினர் மலர்விழி தமிழமுதன் மாவட்ட கவுன்சிலர் அமுதா செல்வம் ஊராட்சி பெற்ற துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here