முள்ளக்காடு:
தூத்துக்குடி அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் பா.ஜ.க. கொடி யேற்று விழா நடைபெற்றது. மாநகர தெற்கு மண்டல தலைவர் சின்னத்தங்கம் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் கணேச பெருமாள், துணைத் தலைவர் ஆனந்தகுமார், தெற்கு மண்டலம் ஷிவன். இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாஸ் ஜெயசந்திரன், ஒன்றிய மேலிட பார்வையாளர் இளங்கோவன், கணேசன், ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபாகர், சண்முகம், முருகேசன், மாநகர மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் ராஜ பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரபு, சிவராமன் ஆகியோர் வரவேற்றனர். இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியால் உலகின் வலிமை மிக்க நாடாக இந்தியா மாறியுள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப் பட்டுள்ளது. இதனால் ஏழை- சாமானிய மக்களுக்கும் சொந்த வீடு கனவு நிறை வேறியுள்ளது. இது பா.ஜ.க.வின் சாதனையாகும்.
தமிழகத்தில் பெண்களுக்கு முத்ரா வங்கி கடன் 1 கோடியே 90 லட்சம் பேருக்கு வழங்கப் பட்டுள்ளது. பெண்களுக்கு இலவசமாக கேஸ் வழங்கப்படுகிறது. பெண்களுக்காக பள்ளிகளிலும் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் படிக்க செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் மனநிறைவு கொண்டுள்ளனர். வல்லரசு நாடாக இந்தியாவை உருவாக்கிட பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும். எனவே பா.ஜ.க. – அ.தி.மு.க.கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலாஜி, தேசிய செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலெட்சுமி, மாவட்ட வர்த்தக அணி துணைதலைவர் உமரி சத்தியசீலன், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பெருங்குளம் நகர தலைவர் ஜோசியர் சின்னத்துரை, வக்கீல் அணி வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு, மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு தலைவர் முள்ளக்காடு வக்கீல் செல்வக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.