கும்பகோணம், டிச. 07 –
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. அப்போரட்டத்தின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பெற்று வந்த உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுகளுக்கு வழங்கி வந்த வேலையை தமிழ்நாடு அரசால் கடந்த 08.03.2023 அன்று நிறுத்தப்பட்டது.
அதனை திரும்ப வழங்க வேண்டியும் மேலும் கிராம உதவியாளர்களின் 14 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் மணிமாறன், தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டச் செயலாளர் குமார், மொட்ட சங்கா ஆலோசகர் ஜோதி விநாயகம், மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில தணிக்கையாளர் ராஜேஷ் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் துரைசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் கரும்பாயிரம், ஓய்வு பெற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் விஷ்ணு ராமன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.





















