சோழபுரம், ஜன. 11 –

கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 51). இவர் பாட்டாளி மக்கள் கட்சியில்  அப்பகுதி முன்னாள் நகர தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதலும் ஏற்பட்டு வந்தநிலையில், நேற்று முன்தினம் காலை ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மண்ணியாற்றங்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த திருஞானசம்பந்தத்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்தனர்.

அச்சம்பவத்தில், பலத்த வெட்டுக் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே திருஞான சம்பந்தம் உயிரிழந்தார். இந்நிலையில் தப்பிவோடி தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று அக்கொலைத் தொடர்பாக ராஜேந்திரன், மணிகண்டன் மற்றும் ராஜா ஆகிய மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here