பெங்களூரு:

பெங்களூரு நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹெலங்கா விமானப்படை தளத்தில் ’ஏரோ இந்தியா’ எனப்படும் இந்திய விமானங்கள் தொடர்பான 12-ம் ஆண்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 232 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 63 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியின் முதல்நாளான இன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 228 டோர்னியர் ரக விமானங்கள் மற்றும் ஏ.எல்.ஹெச் துருவ் என 228 விமானங்கள் ஆப்கானிஸ்தான், மொரீசியஸ், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

2014 முதல் 2018 வரையிலான கடந்த 4 ஆண்டுகளில் 424 தனியார் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், 6 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 237 கோடி ரூபாய் முதலீட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், இந்தியாவில் இந்நிறுவனங்கள் தயாரித்த துப்பாக்கிகள், இலகுரக ஹெலிகாப்டர்கள், ராடார் கருவிகள் உள்ளிட்ட சில தளவாடங்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here