கும்பகோணம், ஜூன். 21 –
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தாலி செயினை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு சுவாமிமலை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கோவீ கண்ணன் சரண்யா தம்பதியினர் இவரது குழந்தை ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளை அருகிலுள்ள நியூ கிரஸன்ட் ஸ்டார் பள்ளியில் விட்டு விட்டு சரண்யா வீடுக்கு திரும்பி வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரண்யா கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுக் குறித்து சுவாமிமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சாமிமலை காவல்துறையினர் அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






















