தேனீர் விடுதியில் நின்றுக் கொண்டிருந்த சோதிடர் மீது கார் மோதி சம்பவயிடத்திலயே பலி மற்றொருவருக்கு பலத்த காயம் – திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை ..

கும்பகோணம், மார்ச். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிந்தபுரத்தில் சாலையில் வேகமாகவும் தாறுமாறாகவும் வந்த கார் திடீரென டீ குடித்து கொண்டிருந்த ஜோதிடர் மீது மோதி ஜோதிடர் சம்பவ இடத்திலேயே பலியானர் மற்றொருவருக்கு பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார். விபத்துக் குறித்து திருவிடைமருதூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவிடைமருதூர் தாலுகா, உமாமகேஸ்வரபுரம் நடுவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சேகரன் வயது 50. இவர் கோவிந்தபுரம் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப் அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சீர்காழி ஆலவேலி சேமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஐயாக்கண்ணு வயது 55 ஜோதிடர், சேகரன் டீ கடையில் நின்று டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது ஆடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி தாறுமாறாக வந்த கார்  ஜோதிடர் மீது மோதி தூக்கி வீசியதோடு டீக்கடைக்குள்ளும் கார் புகுந்தது. அதில் ஜோதிடர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். டீக்கடை நடத்தி வந்த சேகரன் படுகாயம் அடைந்தார். டீக்கடையின் முன்புறம் சேதமடைந்த தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் உயிரிழந்த ஐயாக்கண்ணு, உடலை கைப்பற்றி திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சேகரன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவ்விபத்துக் குறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த ஆடுதுறை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மகன் பவித்ரன் வயது 25 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அச்சம்பவத்தால் அபகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here