பாண்டிச்சேரி, ஏப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ..

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக, அக்கட்சியின் மாநிலத் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். நேற்று அவர் காரைக்காலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் புதுச்சேரி, இளங்கோ நகரில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று நன்பகல்  முதல் சோதனையில் ஈடுபட்டு இரவு 8 மணி வரை சோதனை செய்தனர்.  சென்னையில் இருந்து வந்த 7-பேர் கொண்டு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் இரு பைகள் முழுவதும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி கொண்டு சென்றனர்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் ரவிக்குமார் வீடு மற்றும் அலுவலகத்தில் இதே குழுவினர் சோதனை ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here