கேரள வர்மசிகிச்சை முதல் கண்சிகிச்சை வரை இலவசம்
ராமநாதபுரம், ஆக. 13- ராமநாதபுரத்தில் ஆர்.கே. ஆயுர்தம் இயற்கை வைத்தியசாலை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி, ராமநாதபுரம் இணைந்து நடத்தும் இயற்கை மருத்துவம், கேரள வர்ம மருத்துவம் மற்றும் கண் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கும் இலவச மருத்துவ முகாம் ஆக.24ல் நடைபெற உள்ளது. இம் முகாமில் கேரள வர்ம சிகிச்சை முதல் கண் சிகிச்சை வரை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் ஆர்.கே. ஆயுர்தம் இயற்கை வைத்தியசாலை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராமநாதபுரம் இணைந்து ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் கிழக்குகடற்கரை சாலை சந்திப்பில் அமைந்துள்ள ஆயுர்தாம் ரிட்ரிட் சென்டரில் இயற்கை மருத்துவ முகாம்  ஆக.24ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் ஞாபகசக்தி குறைபாடு, கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த முறையில் கேரள முறை வர்ம சிகிச்சை வழங்கப்பட உள்ளது.  இந்த சிகிச்சைக்கு பின் கண் கண்ணாடி அணிபவர்கள் நிரந்தரமாக கழற்றி விடலாம். உடல் பருமன், தொப்பை, எடை கூடுதவதினால் உண்டாகும் மூட்டுவலி, குதிங்கால் வலி உள்ளிட்ட வலிகள் நிவாரணத்திற்கு தகுந்த ஆலோசனை வழங்கப்படும். சைனஸ் ஒற்றை தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற நோய்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். இலவச மருத்துவ முகாமிற்கு ராமநாதபுரம் கோரல் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அருணகிரி தலைமை வகிக்க உள்ளார். ஆடிட்டர் லோகநாதன், பி.டி.ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிகழ்ச்சியை ரோட்டரி உதவி கவர்னர் சோ.பா. ரெங்கநாதன் துவங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் காளிமுத்து, தேவி ராஜலெட்சுமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். செயலாளர் சுப்பிரமணி நன்றி கூற உள்ளார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here