கும்பகோணம், ஜன. 09 –

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை வெகுச்சிறப்பாக கொண்டாடும் வகையில், கும்பகோணம் தனியார் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, சாதி மதங்களை கடந்து, கிராமிய சூழலை நினைவுப்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கலிட்ட காட்சி காண்போரை கண் குளிரச் செய்தது.

மேலும் இந்நிகழ்வில் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளும் நடைப்பெற்றது. இதில் ஏராளமான புதுப்பானையில், மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், இதில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களும், பெற்றோர்களும் பெரும் அளவில் பங்கேற்று மன மகிழ்வு கொண்டனர்.

மேலும், உலகம் தழுவிய அளவில் ஒட்டு மொத்த தமிழர்களின் பாரம்பரிய விழாவாக, வேளாண்மையை போற்றும் வகையிலும், வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், சூரியனை  வணங்கும் நிகழ்வாகவும், ஆண்டு தோறும், தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில் சாதி மதங்களை கடந்து, தமிழன் என்ற ஒற்றை உணர்வோடு மட்டுமே கொண்டாடப்படும் இவ்விழாவினை போற்றும் வகையில், இன்று கும்பகோணம்  கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முற்றிலும் கிராமிய சூழலில், பள்ளி மாணவ மாணவியர்கள் பாரம்பரிய உடையணிந்து, (வேட்டி, பாவாடை தாவணியில்) கலை நிகழ்ச்சிகளான, பரதநாட்டியம், குழு நடனம், தப்பாட்டம் ஆகியவற்றை ஆட, தொடர்ந்து சிலம்பாட்டம், உறியடித்தல் ஆகிய கிராமிய விளையாட்டு போட்டிகளும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில், அம்மி மிளகாய் அரைத்தல், உரலில், நெல் குத்துதல், அரிசி இடித்தல், குடக்கலில் இட்;லி மாவு அரைத்தல் ஆகியவற்றை மாணவியர்கள் ஆர்வமாக அனைவருக்கும் நேரடியாக செய்து காண்பித்து அசத்தினார்கள்.

அதே சமயத்தில், மற்றொரு புறம், பத்திற்கும் மேற்பட்ட புத்தம் புது பானைகளில் பச்சரிசியிட்டு, பொங்கல் வைத்து, பொங்கி வரும் போது, பொங்கலோ பொங்கல் என உற்சாக குலவை முழக்கமிட்டு, பொங்கல் விழா, உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய விளையாட்டுகளில் ஆர்வமாக கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here