திருவாரூர், மார்ச். 01 –

திருவாரூரில் தேசிய அறிவியியல் தின விழாவை முன்னிட்டு திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், திருவாரூர் நகராட்சிக்கு சொந்தமான மொத்தம் ஏழு பள்ளிகளில் நான்கு தொடக்கப்பள்ளி இரண்டு நடுநிலைப்பள்ளி ஒரு உயர்நிலைப்பள்ளி என மொத்தம் ஏழு பள்ளிகளுக்கான குழந்தைகள் அறிவியல் கண்காட்சி  தெற்கு வீதியில் உள்ள கௌரி சாமி நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்றது. மேலும், இக் கண்காட்சியில் மொத்தம்  190 மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர் .

இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறந்த படைப்புகளை விவரித்த மாணவர்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி .கலைவாணன் வெகுவாக பாராட்டியதோடு மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் அம்மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் , நகராட்சி ஆணையர் பிரபாகரன் , திமுக நகர செயலாளர் வாரை. பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here