மீஞ்சூர், ஏப். 08 –
தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினரை திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க அக்கட்சி நிர்வாகிகள் திமுக வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் படு தீவிரமாக ஈடுப்பட்டு அங்காங்கே முகாம்களை அமைத்து புதிய உறுப்பினர்களை அக்கட்சியில் சேர்த்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் டிஜே கோவிந்தராஜன் ஆலோசனையின் கீழ், திமுக மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளிவாயல் சாவடி, கொண்டக்கரை, சுப்பாரெட்டிபாளையம், மேலூர், நாலூர் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்கள் நடைபெற்றது.
மேலும் இம்முகாமிற்கு திமுக மீஞ்சூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பிரதி பா.து.தமிழரசன், பழவேற்காடு பகுதி மொழிப்போர் தியாகி கன்னிமுத்து, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இம்முகாமில், இளைஞர்களும் இளம்பெண்களும் ஆர்வத்துடன் வந்து தங்களின் பெயர்களை புதிய உறுப்பினர் சேர்க்கையில் பதிவிட்டனர் மேலும், மாற்றுக் கட்சியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக புதிதாக இணைத்துக் கொண்டனர்.
மேலும் இம்முகாமில், மேலூர் நிலவழகன், பா.செ.குணசேகரன். அசோகன், நெல்சன், ஏ.எம்.ஆர்.முரளி, இந்திரா சங்கர், கொண்டக்கரை கலைவாணன், நந்தியம் செல்வமணி, வீரமணி உள்ளிட்டவர்களும் மேலும் திமுகவில் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள திரளாக இம்முகாமிற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கன இளைஞர் இளைஞிகளும் பங்கேற்றனர்.
























