திருத்துறைப்பூண்டி, மார்ச். 21 –
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், சர்வதேச வன நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு மூலம் வனத்தின் நன்மைகள் மற்றும் அவ்வனத்தினால் உயிரினங்கள் பெற்றிடும் நன்மைகள் குறித்து விளக்கி அனைவரிடத்திலும் வன பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல்களை பாடினார்கள்.
மேலும் இந்நிகழ்விற்கு கொக்கலாடி ஊராட்சி மன்ற தலைவர் வசந்த் தலைமையேற்று நிகழ்ச்சியை வழி நடத்தினார். மேலும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட முன்னின்று செயலாற்றினார்.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சிறப்பு விருந்தினர்களாக நீர்நிலை பசுமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் ஐயப்பன், ஹபிபுல்லா, அம்பிகாபதி, சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா மிகச்சிறப்பாக அமைய ஒத்துழைத்த அனைவருக்கும் ஆசிரியர் வளர்மதி நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில், பள்ளி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் திரளாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.





















