திருவாரூர், ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம், பால்காவடி, பன்னீர் காவடி, அழகு காவடி, ரத காவடிகள் என பல்வேறு காவடிகள் சுமந்து வந்தும் மாவிளக்கு போட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
நேற்று மாலை பக்தர்கள் தங்கள் கன்னத்தில் அலகு குத்தி கொண்டு காவடி எடுத்தும் ரத காவடி எடுத்துக் கொண்டு தெரு வீதிகள் வழியாக நடனமாடியவாறு ஆலயத்தை வலம் வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அதன் பிறகு இரவு ஆகாச மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்க பட்டு பக்தர்களுக்கு அருட் பிரசாதங்கள் மற்றும் அன்னதான பிரசாதங்கள் வழங்கி இரவு ஆர்க்கெஸ்ட்ரா எனும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இன்னிசை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.




















