ஆவடி, அக் . 2 –

ஆவடி மாநகராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ்,   75 – வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு “அகம்” எனும் நடவடிக்கைகளாக செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை தினந்தோறும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் மக்காத திடக்கழிவுகளிலிருந்து மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கண்கவர் அழகு பொருட்கள் செய்து பொதுமக்களின் பார்வைக்கு திடக்கழிவு கண்காட்சி விழிப்புணர்வு நடத்தப் பட்டது. அதில் சுமார் 1000 பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். சிறப்பான அழகு பொருட்கள் செய்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாநகராட்சி பொறியாளர், வைத்தியலிங்கம் துணைப் பொறியாளர் சங்கர், சத்தியசீலன், சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், சுகாதார ஆய்வாளர்கள் தண்டுரை பிரகாஷ், பட்டாபிராம் பகுதி சிவகுமார், காந்தி நகர் பகுதி ரவிச்சந்திரன், திருமுல்லைவாயல் பிரகாஷ்,  ஆவடி பகுதி நாகராஜ், மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள்,  பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்துக்  கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here