கும்பகோணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காந்தி சிலை முன்பு கையில் தேசிய கொடியுடன் உழவர்களின் பிள்ளைகள் காந்தியிடம் மனு கொடுத்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம், அக். 02-
கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உச்சி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து காந்தி சிலையிடம் உழவர்களின் பிள்ளைகள் காந்தியிடம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரி கோரிக்கை மனுவை அளித்தனர்.
தொடர்ந்து விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் விமலநாதன் பேட்டி அளித்த போது அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தில் உழவர்களின் வீட்டு குழந்தைகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தனியார் கம்பெனிகளுக்கு ஆதரவான சட்டங்கள், உழவர்களுக்கு எதிரானது ஆதலால் உடனடியாக மத்திய அரசு அச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என அக்குழந்தைகள் தேசப்பிதா மகாத்மாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர் என்று தெரிவித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.