அயப்பாக்கம், அக், 2 –

ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் வாடிக்கையாளர் போல் வந்து கடையில் இருந்த பெண்ணிடம் கழுத்திலிருந்த ஐந்து சவரன் நகையைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சார்ந்த ஷகிலா வயது 32 இவர் அப்பகுதியில் நியூ வேலன் ஸ்டோர் என்ற கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையில் இருந்த அவரிடம் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கடையில் வந்து சிகரெட் ஒன்று வாங்குவது போல் சிகரெட் வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தைக் கொடுப்பது போல் நடித்து, ஷகிலாவின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார். சிறிது தூரத்தில் அவருடன் வந்த மற்றொரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் ஷகிலா புகார் அளித்தார் அப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க  தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here