ஸ்ரீநகர்:

காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும், பிரிவினைவாத அமைப்புகள், இரண்டு நாட்களுக்கு முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன.

அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு அடைப்பு போராட்டத்தினால் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளையும் போராட்டம் நீடிக்கும்.

ஹூரியத் மாநாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய ஜேஆர்எல் அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து ஜேஆர்எல் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலோ, தீர்ப்புகள் வெளியானாலோ மாநிலம் முழுவதும் தீவிர போராட்டம் வெடிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here