திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி பகுதிகளில் மாபெரும் கோவிட்- 19 தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது ஆதன் ஒரு பகுதியாக வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் 3 வது கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரையிலான முகாம் நடைப்பெற்று வருகிறது.
வானகரம், செப். 26 –
இவ்வூராட்சி பகுதியில் இன்று 100 சதவீதம் கொரோனா தொற்று நோய் இல்லா ஊராட்சியாக உருவாக்க 3 வது தொடர் தடுப்பூசி முகாம் நடத்தப் பட்டது.
இதுவரை இப்பகுதியில் உள்ள மக்கள் 75 சதவீத தடுப்பூசி செலுத்திவுள்ளனர். தொடர் முகாம் நடத்தி வரும் நிலையில் விரைவில் 100 இலக்கை அடையும் தூரம் அதிகமில்லை எனக்கூறப்படுகிறது. அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வாகனம் மூலம் தொடர்ந்து நடத்தப்படும் முகாம் தகவல்களை இவ்வூராட்சி மக்களுக்கு அறிவித்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் வானகரம் ஊராட்சித் தலைவர் ஜமுனா ஸ்ரீனிவாசன், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் பிஎஸ் அருள், அலுவலக உதவியாளர் சுலோசனா, ஊராட்சி செயலாளர் கருணாகரன், மருத்துவர், செவிலியர் ஜாஸ்மின், ஆகியோர் கலந்துக் கொண்டனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் அலுவலகத்தில் வந்து சமூக இடைவெளி பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்தபடி ஒவ்வொருவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்