ஆமதாபாத்:

காஷ்மீரில் துணை ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜனதா மூத்த தலைவரும், அம்மாநில வனம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியுமான கணபத்சிங் வாசவா, பாகிஸ்தானுக்கு எதிராக பரபரப்பாக பேசி உள்ளார். பாராளுமன்ற தேர்தலை தள்ளி வைக்கவும் அவர் கோரியுள்ளார். ஆமதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பாகிஸ்தானுக்கு நமது ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று 125 கோடி இந்தியர்களும் விரும்புகிறார்கள்.

வீரர்கள் மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. பழி வாங்குவதற்கான நேரத்தையும், இடத்தையும் தாங்கள் முடிவு செய்வோம் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை கூறியுள்ளது. எனவே, நிச்சயம் பழி வாங்குவார்கள்.

இதற்காக, பாராளுமன்ற தேர்தல் 2 மாதங்கள் தள்ளி போனாலும் நல்லதுதான். ஆனால், பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும். தேர்தலை தள்ளி வையுங்கள். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துங்கள். இங்கு தேர்தல் நடப்பதற்கு முன்பு, பாகிஸ்தானில் ‘இரங்கல் கூட்டம்’ நடக்கும் அளவுக்கு நமது பதிலடி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here