தீர்த்தங்கிரயபட்டு, மார்ச். 26 –

தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் உங்கள் நண்பன் கல்வி அறக்கட்டளையும் மற்றும் தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த விழாவில், துப்புரவு பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர்களுக்கு போர்வைகளும்,  சிஎஸ்ஐ பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், கே.வி. டி. மருத்துவமனை சார்பில் அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு தீர்த்தகங்கிரையபட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன் தலைமை வகித்தார், செங்குட்டுவன், சேட்பா, பாபு, முருகன் ,அபிமன்யு ,அல்தாப், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்குன்றம் போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி ,ஒன்றிய துணை பெருந்தலைவர் சாந்திபாஸ்கர், உள்ளிட்டோர் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் போர்வை மற்றும் .பேக். உள்ளிட்டவைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டைதேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு மாநில செயலாளர் மா. ஜோதி செய்திருந்தார் .இதில் கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்காதுரைராஜ். முகமதுஅல்டாப் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here